தமிழகத்தில் SIR பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், BLO-க்களுக்கான ஊதியத்தை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1,000-லிருந்து 2,000 ரூபாய் ஆகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் 6,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாய் ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் 12,000- 18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
