தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பண்டிகையை முன்னிட்டு இயங்கிய இரண்டு நாட்களில் மட்டும் மொத்தம் ரூ.441.38 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இதில் தீபாவளிக்கு முந்தைய நாளில் சுமார் ரூ.234.75 கோடிக்கும், தீபாவளி பண்டிகை அன்று சுமார் ரூ.206.63 கோடிக்கும் விற்பனை நடைபெற்றுள்ளது. மண்டல வாரியாகப் பார்க்கும்போது, திருச்சி மண்டலம் ரூ.98.97 கோடி விற்பனையுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை மண்டலத்தில் ரூ.95.85 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ.88.38 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.87.52 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.70.66 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மேலும், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் நடைமுறையில் உள்ள சூழலில், பண்டிகைக் காலத்தில் மதுப்பிரியர்கள் பலர் காலி பாட்டில்களைத் திருப்பித் தராமல் பார்சலாக வாங்கிச் சென்றதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு செஸ் வரி மூலமாகவே டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சுமார் ரூ.38 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை என்பதால், அன்று மேலும் ரூ.192 கோடிக்கு மது விற்பனையாகும் எனக் கணிக்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் பட்சத்தில், இந்த தீபாவளிப் பண்டிகைக் காலத்தின் மொத்த டாஸ்மாக் மது விற்பனை சுமார் ரூ.633.38 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புனே அருகேயுள்ள லோனி கல்போர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல 'ஜகதம்பா' உணவகத்தில், உணவிற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியதை…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நூதனமான முறையில் யுபிஐ பண மோசடி நடைபெற்றுள்ளது. பீபால் சௌராஹா…
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சந்திபான் காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இயங்கும் மோட்டார் சைக்கிளின்…
தெலங்கானாவில் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டிய பள்ளி மாணவனை, திருமணமான ஒரு பெண்ணும் அவரது காதலனும் சேர்ந்து…
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…
பெங்களூருவில் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து எதிர்த்து வந்த 24 வயது மகனை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாயே…