சூர்யாவின் இரண்டு படங்களைப் பேசி பேசியே காலி பண்ணிய இருவர்… ரசிகர்கள் கருத்து!

By vinoth on கார்த்திகை 16, 2024

Spread the love

2015 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தைத் தெளிய வைத்து தெளிய வைத்து அடித்தனர் சோஷியல் மீடியாவினர். பாட்ஷா கதையை உல்டா பண்ணி எடுத்துவிட்டு இயக்குனர் லிங்குசாமி ப்ரமோஷன்களில் கொடுத்த பில்டப்புகளை நம்பி வந்த ரசிகர்களுக்கு அஞ்சான் படம் வதைமுகாமாக அமைந்தது.

அந்த கடுப்பில் படத்தை கேலி செய்து மீம்களாக பறக்கவிட்டன. பட ப்ரமோஷனில் லிங்குசாமி பேசிய ‘கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கிருக்கேன்’ என்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டே லிங்குசாமியின் சினிமா கேரியரையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் அவரால் ஒரே ஒரு ஹிட் கூட கொடுக்க முடியவில்லை.

   

அஞ்சான் படத்துக்கு ஓவர் ஹைப் கொடுக்காமல் இருந்திருந்தாலே அந்த படம் இந்தளவுக்கு தாக்கப் பட்டிருக்காது. ஆனால் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகள்தான் படத்தின் குறைகளைப் பூதாகரமாக ஆக்கி ரசிகர்களை வெறிகொண்டு தாக்கவைத்தது. இதனால் சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய ப்ளாப்பாக அமைந்தது அஞ்சான்

   

#image_title

 

இப்போது பத்து ஆண்டுகள் கழித்து லிங்குசாமி செய்த அதே வேலையை செய்து கங்குவா படத்தை ரசிகர்கள் வெறுக்கும் அளவுக்கு ஆக்கிவிட்டார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. படம் ஆரம்பித்ததில் இருந்து அவரும் தனஞ்செயனும் கொடுத்த  பில்டப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்தியாவே பார்க்காத படம், பாகுபலிக்கு சவால் என்றெல்லாம் பேசிப் பேசியே ரசிகர்களுக்குப் படத்தை திகட்டவைத்தனர்.

இதற்கெல்லாம் உச்சம் வைத்தது போல “வெற்றிவிழா குறித்து ரிலீஸூக்கு முன்பே பேசியது, 2000 கோடி வசூல் எதிர்பார்க்கிறேன் என சொன்னது,  கங்குவா பார்ட் 2 வரும்போது அதனோடு போட்டி போட யாருமே வரமாட்டார்கள் என்றெல்லாம் பேசியதற்கு’ இப்போது மொத்தமாக வாங்கிக் கட்டிக் கொள்கிறார் ஞானவேல் ராஜா. இப்படி சூர்யாவின் கூடவே இருந்து பில்டப் கொடுக்கிறேன் என்று அவரின் இரண்டு படங்களைக் காலி பண்ணிவிட்டார்கள் என்று சூர்யா ரசிகர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.