டெல்லி கணேஷ use பண்ணிகிட்டு கழட்டிவிட்ட இயக்குனர்கள்.. விரக்தியில் அவரே சொன்ன தகவல்!

By vinoth on கார்த்திகை 16, 2024

Spread the love

நடிகர் டெல்லி கணேஷ், தமிழ் சினிமாவில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். திருநெல்வேலியில் பிறந்த அவர் ஏர்போர்ஸ் வேலைக்காக டெல்லி சென்ற போது அங்குள்ள தமிழ் நாடகக் குழுக்களோடு பழக்கம் ஏற்பட்டு மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படிதான் அவருக்கு சினிமாவுக்கான வழி பிறந்துள்ளது. அவரின் நடிப்பைப் பார்த்து கவரப்பட்ட பாலச்சந்தர், 1976 ஆம் ஆண்டு ‘பட்டின பிரவேசம்’ என்ற திரைப்படத்தில் அவரைஅறிமுகப்படுத்தினார்.

1981 ஆம் ஆண்டு ‘எங்கம்மா மகாராணி’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார் டெல்லி கணேஷ். பின்னர் துணை கதாபாத்திரங்கள், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் டெல்லி கணேஷ். அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது பாலச்சந்தர் இயக்கிய சிந்து பைரவி திரைப்படம்தான்.

   

அதன் பின்னர் நகைச்சுவை, குணச்சித்திரம் என தனது நடிப்பால் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ளார் டெல்லி கணேஷ். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவு காரணமாக தன்னுடைய 81 ஆவது வயதில் அவர் காலமானார்.

   

#image_title

 

அவரின் இந்த மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரின் நினைவைப் போற்றும் விதமாக அவருடைய பழைய நேர்காணல்களை எல்லாம் பரப்பி வருகின்றனர். அதில் ஒரு நேர்காணலில் டெல்லி கணேஷ் விரக்தியோடு பேசிய ஒரு சம்பவம் தற்போது வைரல் ஆகிவருகிறது.

அதில் “நான் நிறைய குறும்பட இயக்குனர்களுக்காக குறைவான சம்பளத்தில் நடித்துள்ளேன். ஆனால் அப்படி நான் நடித்துக் கொடுத்தவர்கள் இயக்குனர்கள் ஆனபின்னர் என்னை அழைத்ததில்லை. ஒரே ஒருவர் கூட அப்படி என்னை நடிக்க அழைத்ததில்லை. ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உதவி என்று கேட்டு வருகிறார்கள் நான் நடித்துக் கொடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் எடுத்த லவ் டுடே படம்  முதலில் குறும்படமாகதான் எடுக்கப்பட்டது. அதில் சத்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ்தான் நடித்திருப்பார்.