ஒரு ஓட்டுக்கு ரூ..25,000 பணம்.. வாரி இரைக்கும் லீமா ரோஸ்… அதிரவைக்கும் தேர்தல் முறைகேடு புகார்…!!

By Soundarya on சித்திரை 17, 2026

Spread the love

லால்குடி தொகுதிக்குட்பட்ட மாந்துறை பகுதியில், அதிமுக வேட்பாளர் லீமா ரோஸுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு ரூ.25,000 மதிப்பிலான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆட்டோக்களில் வந்த கும்பல், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தால் ஒரு ஓட்டுக்கு ரூ.25,000 வழங்கப்படும் எனக் கூறி இந்த டோக்கன்களை வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே லீமா ரோஸ் தான் மிகவும் வசதி படைத்தவர் என்பதும், அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.1,048 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது. பண பலத்தைப் பயன்படுத்தித் தேர்தலில் முறைகேடு செய்யப்படுவதாக எழுந்துள்ள இந்தப் புகார் குறித்துத் தேர்தல் ஆணையம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இது அப்பகுதி மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.