இரண்டாவது திருமணம் செய்யப் போகிறாரா சமந்தாவின் EX கணவர் நாக சைதன்யா.. மணப்பெண் இவர் தானா.. வைரலாகும் தகவல்..

By Ranjith Kumar

Updated on:

பல ரசிகர்களுக்கு கனவு கன்னியாக இருக்கும் நடிகை சமந்தா அவர்களுக்கு திருமணம் ஆகப்போகிறது என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகினார்கள் இந்திய திரை உலகில் மிகப்பெரிய ஃபேன் பேஸ் வைத்துள்ளார் சமந்தா. சமந்தா அவர்கள் முதன் முதலில் நாக சைதன்யா இருவரும் ஏய மாய சவாலே படத்தில் நடித்து, பிறகு ரகசியமாக காதலித்து 2017ல் இரு வீட்டார்களை சம்பந்தம் செய்து பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமண உறவில் மூன்று ஆண்டுகள் மட்டுமே கழித்த சமந்தா, மனவேதனையுடன் தங்கள் உறவை முடித்துக் கொண்டார்.

டோலிவுட்டின் அழகான ஜோடி என்று அழைக்கப்படும் இந்த ஜோடி, தங்களுக்குள் ஏற்பட்ட உள் மோதல்களை மறைத்துள்ளனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது என்றே சொல்லலாம். விவாகரத்துக்குப் பிறகு, அவர்கள் தனித்தனியாக தங்கள் வாழ்க்கையில் பிஸியாகிவிட்டனர்.நடிகை சமந்தாவுடனான நாக சைதன்யா விவாகரத்துக்குப் பிறகு, இருவரும் தங்கள் கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது இவர்களின் இரண்டாவது திருமணம் குறித்த செய்திகள் வைரலாகி வருகிறது. அவர்கள் தரப்பில் எந்த அறிவிப்பும் தரவில்லை. ஆனாலும் செய்திகள் வந்தவாறு இருக்கிறது.

   

இந்நிலையில், நாக சைதன்யா தொடர்பான செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  நாக சைதன்யாவின் தந்தையான நாகர்ஜுனா தன் மகனுக்கு 2ம் திருமணம் செய்து வைக்க தயாராகிவிட்டார் என்று கூறப்படுகிறது. நல்ல பெண்ணை நாகர்ஜுனா தேர்வு செய்துள்ளார்.அந்த பெண் வேறு யாரோ இல்லை. நாகார்ஜுனாவின் உறவினர் தான்.திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சமந்தாவுடனான விவாகரத்துக்குப் பிறகு, நாக சைதன்யா ஒரு கதாநாயகியுடன் டேட்டிங் செய்து வருகிறார்.

பாலிவுட்டில் செட்டிலான தெலுங்கு நடிகை சோபிதா துலி பாலாவை நாக சைதன்யா காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டில் டின்னர் டேட் பண்ணிட்டு இருந்த போட்டோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நாக சைதன்யா இவரை தான் திருமணம் செய்யப்போவதாக விஷயங்கள் பரவி வருகிறது. சமந்தாவின் இரண்டாவது திருமணம் விரைவில் நடக்கப் போவதாக சமூக வலைதளங்களில் இன்னும் பரபரப்பாக பேசப்படுகிறது.

author avatar
Ranjith Kumar