ரூ 5.4 கோடி மதிப்பில் சொகுசு கார் வாங்கிய நடிகர் துல்கர் சல்மான்…  அப்படி அந்த காரில் என்ன ஸ்பெஷல் தெரியுமா..?

By Begam

Published on:

மலையாள சினிமா திரை உலகில் இன்றும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் மம்மூட்டி. இவரின் ஒரே மகன் தான் நடிகர் துல்கர் சல்மான். இவரும் தனது தந்தையைப் போலவே சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன.

   

இவர் மலையாளத்தில் ‘கிங் ஆப் கோத்தா’ என்ற படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தின் விளம்பர பலகைகளில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது . இதைத்தொடர்ந்து தற்பொழுதும் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

நடிகர் துல்கர் ஆடம்பரக்கார் பிரியர் என சொல்லப்படுகிறது. அவர் ஃபெராரி 458 ஸ்பைடர் சொகுசு காரை துல்கர் சல்மான் சொந்தமாக வைத்துள்ளார். இந்த காரின் விலை சுமார் 1.74 கோடி என சொல்லப்படுகிறது. இத்தாலியில் இருந்து வரவழைக்கப்பட்டது. இவரது தந்தை மம்முட்டி இடம் ஃபெராரி 812 கார் உள்ளது. அதன் விலை சுமார் 4 கோடி.

இதுமட்டுமில்லாமல் பிஎம்டபிள்யூ எக்ஸ் 6எம் இதன் விலை சுமார் 2.13 கோடி ரூபாய், அதே போல 1.4 கோடி மதிப்புள்ள BMW M3 CS காரையும் வைத்துள்ளார் துல்கர். இதுபோன்று பல்வேறு சொகுசு கார்களை வைத்துள்ள நடிகர் துல்கர் சல்மான் தற்பொழுது 5.4 கோடி மதிப்பில் FERRARI 296 GTB கார் ஒன்றை  வாங்கியுள்ளார். இந்த கார் 2.9 வினாடிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல கூடியதாம். இதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்திலும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)