“செல்வராகவன் என்னை ‘புதுப்பேட்டை 2’ படத்தில் நடிக்க கூப்பிட்டா, நா கண்டிப்பா..” ஓப்பனாக பேசிய சோனியா அகர்வால்…

By Begam

Updated on:

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வ ராகவன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் புதுப்பேட்டை.  தற்பொழுதும் இத்திரைப்படம் காலம் கடந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுப்பேட்டை படம் தனுஷ் ரசிகர்களுக்கு எப்பொழுதுமே ஒரு ஸ்பெஷலான படம் தான். தனுஷை  முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டிய திரைப்படங்களில் இந்த படத்திற்கு பெரிய பங்கு உண்டு என்று கூறலாம்.

   

இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சினேகா மற்றும் சோனியா அகர்வால் இருவரும் நடித்திருந்தனர். தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். முதல் படத்திலிருந்து இயக்குனர் செல்வராகவனும் இவரும் காதலிக்கத் தொடங்கினர்.

இதை தொடர்ந்து 7G ரெயின்போ காலனி, மதுர, கோவில், திருட்டுப்பயலே என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். புதுப்பேட்டை படத்திற்கு பின்னர் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 2006ல் செலவரகவானை திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால், பின் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். தற்பொழுது நடிகை சோனியா அகர்வால் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது ‘புதுப்பேட்டை 2’ திரைப்படம் எடுக்கப்பட உள்ளது.  இத்திரைப்படம்  வரும் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்க உள்ளதாகவும்  தகவல்கள்  வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து முதல் பாகத்தில் நடித்த நடிகை  சோனியா அகர்வால் இந்த பாகத்திலும் நடிப்பாரா..? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய அவர், ‘  “செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த தயக்கமும் இல்லை. கண்டிப்பா என்ன நடிக்க கூப்பிட்டா நடிப்பேன். இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை” என்று கூறியுள்ளார்.