நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றுதான் ஜியோ. இந்த நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குடும்பத்திற்கு சொந்தமானது. இந்தியாவில் இந்த நிறுவனத்தின் சிம்கார்டுகளை பல கோடி பேர் பயன்படுத்துகிறார்கள்.ஆரம்பத்தில் குறைந்த விலையில் ரீசார்ஜ் கட்டணங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்த ஜியோ நிறுவனம் தற்போது கட்டணங்களை படிப்படியாக உயர்த்தியுள்ளது.இது வாடிக்கையாளர்களுக்கு பெரு அதிர்ச்சியை கொடுத்தது.இதனிடையே ஜியோ நிறுவனம் குறைந்த ரீசார்ஜ் கட்டணமான ரூ. 249 இருந்த கட்டனதை தற்போது ரூ.299 ஆக உயர்த்தியுள்ளது.
இதில் ரூ.249க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1.5 gb டேட்டா மற்றும் வரம்பற்ற கால்கள் ,எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுதல் இது ஜியோ நிறுவனதின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆக இருந்தது . தற்போது ரூ.249 திடத்தை ஜியோ நிறுத்தியுள்ளது. ஜியோ நிறுவனத்தைப் போலவே ஏர்டெல் நிறுவனமும் தற்போது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. ஏர்டெல் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் ரூபாய் 249 இருந்துள்ள நிலையில் தற்போது இந்த பிளான் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி இந்த பிளானை அமல்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை.
