மதுரையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் இரண்டாவது மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் முழு வீச்சில் அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் விறுவிறுப்பாக தயாராகி வரும் மாநாட்டு அரங்கில் 100 அடி கொடிக்கம்பம் கீழே சாய்ந்தது. கிரேன் மூலம் நிறுவ முயன்ற போது ரோப் அருந்ததியில் கொடிக்கம்பம் கார் ஒன்றின் மீது விழுந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. நல்வாய்ப்பாக அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஓடி சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
