இந்தியாவில் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றுதான் எல்ஐசி. இது காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. சிறப்பு திட்டத்தில் தாமத கட்டண தள்ளுபடி 30%, அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை அறிவிக்கப்பட்டது.
மேலும் மைக்ரோ காப்பீட்டு பாலிசிகளுக்கு 100% கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீடுகள் புதுப்பிப்புக்கு கட்டண விலக்கு பொருத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . பிரீமியம் செலுத்தும் நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான பாலிசிகள் இதற்கு தகுதியானவை என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தச் சிறப்பு திட்டம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அமலில் இருக்கும் என எல்ஐசி அறிவித்துள்ளது.
