சூப்பர் காம்போ…! பிரபல தமிழ் நடிகரின் படத்தில் கமிட்டான லிஜோ மோல்….? குஷியில் ரசிகர்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 11, 2025

Spread the love

சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் லிஜோ மோல். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் லிஜோ மோலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஜெய்பீம் படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது தமிழில் ஒரு முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக லிஜோ மோல் நடிக்கப் போகிறாராம். அது வேறு யாருமில்லை. நடிகர் விஜய் சேதுபதி தான்.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். இதுவரை இரண்டு வாரங்கள் ஷூட்டிங் முடிவடைந்ததாக தெரிகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க லிஜோ மோல் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.