இயற்கை பேரிடர்களால் நிகழும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மின்னல் தாக்குவதால் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ‘மாபெரும் மின்சார பொறி’ என்று அழைக்கப்படுகிறது மின்னல். ஒரு மின்னல் 100 மில்லியனில் இருந்து ஒரு பில்லியன் ஓல்ட் ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியது.
மின்னல் தாக்குதல் இந்தியாவில் மத்திய இந்தியா மற்றும் மத்திய கிழக்கு இந்திய மாநிலங்களில் அதிகமாக நடக்கிறது. எனவே மின்னல் தாக்கும்போது வீடுகளில் இருப்பதே மிக நல்லது. மழை பெய்து, இடி இடித்து, மின்னல் வெட்டுவது ஒரு இயற்கை நிகழ்ச்சி. தற்பொழுது மின்னல் தாக்குதல் ஒரு இயற்கை பேரிடராக உருவெடுத்துள்ளது.
பொதுவாக மின்னல் தாக்குவதை வீடியோ எடுப்பது என்பது அரிதாகவே பார்க்கப்படுகிறது. மும்பையில் உள்ள அப்பாச்சியில் சிம்பள்ளியில் நிமினார் எனும் இடம் உள்ளது. நேற்று பெய்த கன மழையால் அங்கு இடியுடன் கூடிய மின்னல் தாக்கியது. அங்கு பெய்த கனமழையை எதிர்பாராத விதமாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபரின் செல்போனில் இந்த மின்னல் தாக்குதல் பதிவாகியுள்ளது.
கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் ஒன்று கட்டிடத்தை தாக்கியது. அந்த கட்டிடத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்ததால் சேதங்கள் இன்றி கட்டிடம் தப்பித்தது. தற்பொழுது அந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
https://www.youtube.com/watch?v=2AL7CjcLBek