தமிழக கோயில்கள், திருவிழாக்கள் வீடுகளில் நடக்கும் மங்கள நிகழ்சிகள் போன்றவற்றிற்கு தவில், நாதஸ்வரம் கொண்டு நீண்ட இசையுடன் வரவேற்பது பாரம்பரியமாக தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கம். தமிழகத்தை போல கேரள கோயில்களில் தோல் கருவியான செண்டை மேளம், காற்று வாத்தியமான கொம்பு குழல் வாத்தியங்கள் இசைக்கப்படுவது பாரம்பரியம்.
ஆண்டுதோறும் கேரள மாநிலம் திருச்சூரில் பூரம் விழாவில் மாநிலம் முழுவதும் உள்ள செண்டை மேள கலைஞர்கள் ஒரே இடத்தில் கூடி இசைக்கருவிகளை இசைப்பதை ரசிக்க பல மாநில மக்கள் அங்கே கூடுவர். செண்டை மேளங்கள் அதிர்வு இசை அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில் இருக்கும். தமிழ்நாட்டில் தவில் நாதஸ்வரம் எப்படி பிரபலமோ அதுபோல அங்கே செண்டை மேள வாத்தியங்கள் பிரபலம்.
இப்பொழுது செண்டை மேளம் பற்றி இங்கு விரிவாக காண்போம். செண்டை என்பது பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு தாள இசைக்கருவி. செண்டை மேளம் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பண்டைய தமிழ் இசை தோற்கருவி ‘கொடு கொட்டி’ என்பதன் பரிணாம வளர்ச்சி செண்டை மேளம்.
பொதுவாக இது பசு மாட்டின் அடி வயிற்று தோல் கொண்டு உண்டாக்கப்படுகிறது. பயிற்சி ஆரம்பிக்கும் பொழுது முதலில் பிள்ளையாரை வணங்கும்படி கணபதி கை கொட்டப்படுகிறது. முடிவிலும் இது கொட்டப்படும். கர்நாடகத்திலும் எக்க்ஷான கலையில் பயன்படுத்தப்படுகிறது. தற்பொழுது ஒரு விழாவில் கேரள பெண்கள் ஒன்று சேர்ந்து செண்டை மேளம் அடித்து பிரபலமாகி உள்ளனர் .அவர்களின் கலக்கல் வீடியோ இதோ உங்களுக்காக….