வைகை புயல் வடிவேல் பிறந்தநாள்… முன்னனி நடிகையுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்…குவியும் வாழ்த்துக்கள்…..

By Begam

Updated on:

வைகைப்புயல் வடிவேலு ‘மாமன்னன்’ திரைப்படக் குழுவினருடன் இணைந்து தனது 61 வது பிறந்தநாளை  சிறப்பாக கொண்டாடியுள்ளார்.’எனக்காடா எண்டு கார்டு போடுறீங்க… எனக்கு எண்டே  கிடையாதுடா… ‘என்ற பஞ்சுக்கு ஏற்ப வடிவேலு திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார்.

   

தமிழக மக்களுடன் மிக ஆழமாகவும், அழுத்தமாகவும் பிணைக்கப்பட்டவர் நடிகர் வடிவேலு. மன அழுத்தத்துக்கும் சோர்வுக்கும் உள்ளாகி இருந்த மக்களுக்கான மருத்துவமாக வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் இருந்தது. 1988 ஆம் ஆண்டு வந்த ‘என் தங்கை கல்யாணி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வடிவேலு .

அதன் பிறகு 1990 ஆம் ஆண்டு இவரது மார்க்கெட் சூடு பிடிக்க ஆரம்பித்தது. என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், தேவர் மகன், தெய்வ வாக்கு,  மருதமலை, ஆதவன், நகரம், காவலன் போன்ற படங்களில் காமெடிகளில் கலக்கியிருப்பார். 1990 இல் தொடங்கி இன்று வரை கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது சிறிது காலம் நடிப்பில்  திரையுலகை விட்டு விலகி இருந்த இவர் தற்பொழுது ‘எனக்கு எண்டே கிடையாதுடா’ என்ற வசனத்திற்கு ஏற்ப மீண்டும் திரைத்துறையில் தனது அடுத்த இன்னிங்ஸ் தொடங்க இருக்கிறார்.

அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்  ஐந்து படங்களில் தான் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறியிருந்தார். அதில் தற்பொழுது மாமன்னன் பட சூட்டிங் நடைபெற்றுக் கொண்டு வருகிறது .இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் தான் இன்று வடிவேலு தனது 61 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ இந்த புகைப்படங்கள் உங்களுக்காக….