Connect with us

CINEMA

சர்ச்சையில் சிக்கிய லியோ டிரெய்லர்.. எரியுற தீயில எண்ணெய்யை ஊத்துற மாதிரி ஆகிடுச்சே..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் திரிஷா இணைந்து நடித்த படம் லியோ இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்களும் பாடல்களும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. வருகிற 19-ஆம் தேதி லியோ திரைக்கு வர உள்ளது.

   

படம் ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. இந்நிலையில் லியோ படத்திலிருந்து வெளியான நான் ரெடி பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டது.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. டிரெய்லர் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இன்று மாலை லியோ படத்தின் மாஸான ட்ரெய்லர் வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அது ஒருபுறம் இருக்க ட்ரெய்லரில் விஜய் ஒரு மோசமான வார்த்தையை பேசியுள்ளார். ஏற்கனவே நான் ரெடி பாடலில் லியோ சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று அந்த பிரச்சனை ஓய்வதற்குள், ட்ரெய்லரில் விஜய் ஒரு மோசமான வார்த்தையை பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். விஜய் பேசிய அந்த வார்த்தை பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் விதமாக உள்ளது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top