Connect with us

CINEMA

நடிகர் விஜய் சேதுபதிக்கும் , நடிகர் அட்டகத்தி தினேஷுக்கும் இப்படி ஒரு தொடர்பா…? 14 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாங்க தெரியுமா…?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோ தான் என்று இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பதால் அவர் கை நிறைய படங்கள் இருக்கிறது. இவர் தனது ரசிகர்களால் அன்போடு ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானது.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ,ஹிந்தி போன்ற பல மொழி திரைப்படங்களிலும் கால் பதித்து நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக களமிறங்கிய விடுதலை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

இதைத்தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

இவரைப்போலவே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அட்டகத்தி தினேஷ் . இவர் தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு குக்கூ படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் அதற்காக ஏகப்பட்ட பாராட்டுகள் கிடைத்தது என தெரிவித்துள்ளார். தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் நடிகர் தினேஷ்.

இந்நிலையில் நடிகர் அட்டகத்தி தினேஷ் 14 வருடங்களுக்கு முன்பு தனது பிறந்தநாள் அன்று நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் திடீரென வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் பார்ப்பதற்கு இருவரும் நெருங்கிய நண்பர்கள் போலவும், ஆள் அடையாளம் தெரியாமலும் காணப்படுகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

Continue Reading

More in CINEMA

To Top