Connect with us

Tamizhanmedia.net

வசூலில் ஜெயிலருடன் போட்டியிட்ட லியோ படத்தோட உண்மையான பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் இது தான்.. வெளியான ரிப்போர்ட்..

CINEMA

வசூலில் ஜெயிலருடன் போட்டியிட்ட லியோ படத்தோட உண்மையான பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் இது தான்.. வெளியான ரிப்போர்ட்..

கடந்த அக். 19ம் தேதி நடிகர் விஜய் நடித்த லியோ படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மொத்த வசூல் நிலவரம் குறித்து அதிகாரபூர்வமான தகவல் இதுதான். லியோ படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடி ரூபாய். இதுதவிர பப்ளிசிட்டி செலவு ரூ. 5 கோடி, டிஸ்டிரிப்யூட் செலவு ரூ. 3கோடி, வட்டி ரூ. 37 கோடி. இந்த 300 கோடியில் விஜய் சம்பளம் ரூ. 120 கோடி, இயக்குநர் லோகேஷ் சம்பளம் ரூ. 20 கோடி, வில்லன் நடிகர் சஞ்சய் தத் சம்பளம் ரூ. 10 கோடி, இசையமைப்பாளர் அனிரூத் சம்பளம் ரூ. 7 கோடி, கதாநாயகி திரிஷா சம்பளம் ரூ. 3கோடி, கவுதம் மேனன், அர்ஜூன் சம்பளமும் தலா ரூ. 3 கோடிதான். மிஸ்கின் சம்பளம் ரூ. 2கோடி, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சம்பளம் ரூ.2 கோடி, இதர நடிகர், நடிகையர், படக்குழுவினர் சம்பளம் மொத்தம் ரூ.15 கோடி.

Leo Collection

   

இப்படி மொத்தம் சம்பளமாக மட்டும் லியோ படத்துக்காக ரூ. 190 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. லியோ படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் வசூலான நிலவரம்; தமிழ்நாடு ரூ. 34 கோடி, கேரளா ரூ. 12 கோடி, கர்நாடகா ரூ. 14 கோடி, ஆந்திரா, தெலுங்கானா ரூ. 16 கோடி என, உலகம் முழுவதும் ஒரே நாளில், முதல் நாளில் மட்டும் லியோ மொத்த வசூல், 148.5 கோடி ரூபாய். இதுமட்டுமின்றி லியோ படம் ரிலீஸ் ஆன பிறகு, 30 நாட்களில் அதாவது நேற்று வரை வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.

அதன்படி இந்தியாவில் மொத்தம் 386.50 கோடி ரூபாய், ஓவர்சீஸ் மூலம் 201 கோடி ரூபாய், வட இந்தியாவில் ரூ. 36 கோடி ரூபாய், கேரளாவில் மட்டும் 60 கோடி ரூபாய், கர்நாடகாவில் 38.50 கோடி ரூபாய், ஆந்திரா, தெலுங்கானாவில் 47 கோடி ரூபாய், தமிழ்நாட்டில் 205 கோடி ரூபாய், உலக அளவில் (யுனிவர்ஸ்) 148.50 கோடி ரூபாய் என மொத்த வசூல் 587.50 கோடி ரூபாய் என்பதுதான் உண்மையான லியோ வசூல் நிலவரம்.

Leo Collection

இதில் தமிழ்நாட்டில் முதன்முறையாக தியேட்டர் ஷேர் ஆக ரூ. 100 கோடி தந்ததும் லியோ படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தியேட்டரிக்கல் ரைட்ஸ், நான் தியேட்டரிக்கல்ஸ் ரைட்ஸ் என்ற முறையில், தியேட்டரிக்கல் ரைட்ஸ் ஆக 202 கோடி ரூபா், நான் தியேட்டரிக்கல் ரைட்ஸ் ஆக 232 கோடி ரூபாய் என, படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 99 கோடி ரூபாய் லாபத்தை பெற்றது லியோ என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது மொத்தமாக 587.50 கோடி ரூபாய் என, படத்தின் தயாரிப்பு செலவை விட 257 கோடி ரூபாய் அதிக லாபத்தை லியோ பெற்றுள்ளது.

ALSO READ  உண்மையில் ஜெயிலர் வசூலை முறியடித்ததா லியோ..? வெளியான கலக்ஷன் ரிப்போர்ட்...

More in CINEMA

To Top