
CINEMA
‘அந்த நடிகையிடம் செருப்பால் அடி வாங்கியது’… குறித்து மனம்திறந்த நடிகர் இளவரசு.. இப்படி கூட இருக்காங்களா..?
தமிழ் சினிமாவில் ஒரு குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவையில் அவ்வப்போது முகம் காட்டி வருபவராகவும் இருப்பவர் நடிகர் இளவரசு. கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்த இவர் முதன் முதலில் பாரதிராஜாவால் சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். 1987 ஆம் ஆண்டு வெளியான ‘வேதம் புதிதி’ என்ற படத்தில் முதன் முதலில் நடித்தார் இளவரசு. இந்தப் படத்தை இயக்கியவர் பாரதிராஜா.அதனை தொடர்ந்து பல படங்களில் தோன்றிய இளவரசு தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக அறியப்பட்டார்.
இவர் நடிப்பில் வெளிவந்த ‘முத்துக்கு முத்தாக’ திரைப்படத்தை நாம் யாரும் மறக்க முடியாது. நடிகர் இளவரசு நல்ல நடிகர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும் இருந்து வருகிறார். இவரின் ஒளிப்பதிவில் பல நல்ல திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. பிரபுவின் நடிப்பில் வெளிவந்த ‘பாஞ்சாலக்குறிச்சி’ மற்றும் ‘பெரியதம்பி’, விஜயின் நடிப்பில் சூப்பர் ஹிட் படமான ‘ நினைத்தேன் வந்தாய்’, ‘இனியவளே’, ‘வீரநடை’, ‘மனம் விரும்புதே உன்னை’ போன்ற படஙகள் எல்லாம் இளவரசு ஒளிப்பதிவில் வெளிவந்த படங்களாகும்.
மேலும் இவரை முதன் முதலில் ஒளிப்பதிவாளராக்கிய பெருமை சீமானையே சேரும். தற்பொழுதும் இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தின் ஒரு காட்சியில் இளவரசு செருப்பால் அடி வாங்குவது போல் நடித்திருப்பார். இவ்வளவு பெரிய குணச்சித்திர நடிகர் இப்படி செருப்பால் அடி வாங்குவது போல் நடித்திருக்கிறார் என்ற ஆச்சரியம் எல்லோருக்குமே இருந்திருக்கிறது.
இதுபற்றி பேட்டி ஒன்றில் செய்தியாளர் கேட்கும் பொழுது அவர் கூறியதாவது, ‘நான் கொலைகாரனா நடிக்கிறேன். கொள்ளைக்காரனா நடிக்கிறேன் அப்படின்னா நீங்க என்னை தூக்கி ஜெயில்ல போட்டுவிடுவீர்களா? நடிப்புங்கிறதா அப்படி ப்ரொபஷனலா எடுத்துக்க கூடாது. தொழில் முறை நடிகர்கள் அப்படிங்கறதுக்கு அப்புறம் என்ன அர்த்தம் இருக்கு. கொலை பண்றோம். கற்பழிக்கிறோம். அதெல்லாம் எந்த உணர்வும் கிடையாது.
நான் இதை ப்ரொபஷனலா எடுத்துக்கிட்டா, நான் இந்த தொழிலுக்கு லாயக்கு இல்லைன்னு அர்த்தம். அந்த நடிப்புக்கும் பர்சனல் இளவரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எத்தனை படத்துல நடுரோட்டில் தீ வைத்து எல்லாம் எரிச்சு இருக்கேன்’ என்று நடிப்பு வேற ரியல் லைப் வேற என்பதை சக நடிகர்களுக்கும் புரிய வைத்து தான் ஒரு நல்ல நடிகர் என்பதை அவர் இந்த பேட்டியின் மூலம் நிரூபித்து விட்டார். தற்பொழுது இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி அவரை கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram