
CINEMA
மருத்துவமனையில் 3 நாட்களாக தொடரும் சிகிச்சை… மூச்சு விடுவதற்கே சிரமப்படும் நடிகர் விஜயகாந்த்… இப்ப எப்படி இருக்காரு தெரியுமா…?
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் தனது ரசிகர்களால் ‘கேப்டன்’ என அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் 156 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் நடிகர் விஜயகாந்த். இவருடைய இடத்தை எந்த நடிகராலும் இதுவரை முடியவில்லை.
இவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் ஏராளம். தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழிகளிலும் நடிகர் விஜயகாந்த் நடித்தது கிடையாது. இவர் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். நடிகராக மட்டுமின்றி ஒரு தலைசிறந்த அரசியல்வாதியாகவும் செயல்பட்டார். கடந்த சில வருடங்களாக உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறார் நடிகர் விஜயகாந்த். சமீபத்தில் இவருக்கு நடந்த சிகிச்சை ஒன்றில் இவரின் கால் விரல்கள் அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கம்பீரமாக திரையில் பார்த்த நடிகர் விஜயகாந்தை, தற்பொழுது இந்த நிலையில் பார்க்கும் அவரது ரசிகர்கள் கண்கலங்கி வருகின்றனர். அவ்வப்பொழுது நடிகர் விஜயகாந்த்தை திரைபிரபலங்கள் நேரில் சென்று சந்தித்தும் வருகின்றனர். இவர் அவ்வப்போது உடற்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று வருவார். அப்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருந்ததால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு விஜயகாந்துக்கு 3ஆவது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பால் கேப்டன் விஜயகாந்துக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாகவும், அவருக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் இறைவனை வேண்டி வருகின்றனர்.