Categories: சினிமா

பயமா இருக்கா..? இனிமே பயங்கரமா இருக்கும்… லியோ 4 மணி காட்சி … நாளை வெளியாகும் முக்கிய தீர்ப்பு…

Spread the love

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இரண்டாவது முறை இணைந்த இவர்களது வெற்றிக்கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயுடன் இணைந்து நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இத்திரைப்படத்தில்பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லியோ தாஸ் என்ற கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடிக்க ஆண்டனி தாஸ் மற்றும் ஹெரால்ட் தாஸ் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் இருவரும் நடித்திருக்கின்றனர். இது தவிர சமீபத்தில் வந்த ட்ரெய்லரில் தளபதி விஜயின் கதாபாத்திரத்தின் பெயர் “பார்த்தி” என்றும் குறிப்பிடப்படுவதால் விஜய் இரட்டைக் கதாபத்திரத்தில் நடிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.இந்த நிலையில், ‘லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதாவது நேரம் குறிப்பிடாமல் ஒரு நாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது. தற்பொழுது லியோ திரைப்படத்தை அதிகாலை 4 மணிக்கு ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்கள் காட்சிக்கு அனுமதித்தால் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதம் செய்த நீதிபதி கூறுகையில் ஒரு நாளை 6 காட்சிகளை திரையிடும் அளவுக்கு நேரம் இருக்கிறது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனிதா , ‘ரசிகர்கள் காட்சியை அனுமதிக்கக் கூடாது என்ற மதுரை வழக்கு தொடர்பான ஆவணங்களை இங்கு தாக்கல் செய்யுங்கள். இந்த வழக்கில் நாளை முதல் வழக்காக தீர்ப்பளிக்கப்படும்’ என கூறியுள்ளார்.

 

Begam

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

4 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

4 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

4 மணத்தியாலங்கள் ago