சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர்.சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளனர். அவர்களைப் போலவே களமிறங்கி வெள்ளித்திரையில் ஜொலித்தவர் நடிகை வித்யா பிரதீப். இவர் கேரளாவைச் சேர்ந்தவர்.
பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா, ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார். அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய வித்யா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான “சைவம்” படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியலில் நடித்து வந்தார். 2015 ஆம் ஆண்டு வெளியான பசங்க 2 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு 2016 ஆம் ஆண்டு வெளியான ஒண்ணுமே புரியல மற்றும் தலகால் புரியல ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் அதன்பின்பு அச்சமின்றி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகச் சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றார்.
இப்படி பல ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர் திடீரென சினிமா சீரியல் எதுவுமே வேண்டாம் என அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். மருத்துவ பிஎச்டி முடித்து அமெரிக்காவில் செட்டில் ஆகிய அவர் தான் அமெரிக்காவில் ஆராய்ச்சி பணி செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…