விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்கள் தான் பாலா மற்றும் புகழ். பாலா முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் இந்நிகழ்ச்சியில் தனது டைமிங் காமெடி மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கிய அவர் தற்பொழுது இந்த பிரபலத்தின் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்பொழுது பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.
சமீபத்தில் பாலா தனது பிறந்தநாளுக்கு ஒரு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்திருந்தார். தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது வரை 3 ஆம்புலன்ஸ் தனது சொந்த பணத்தை போட்டு ஏழை எளிய மக்களுக்காக வாங்கி கொடுத்துள்ளார் .
தற்போது இவர் சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு ஆம்புலன்ஸ் கொடுத்து உதவி உள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இன்னைக்கு என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள், இதுவரை 3 ஆம்புலன்ஸ் கொடுத்து இருக்கிறேன். முதலாவதாக அறந்தாங்கி நமது இல்லத்திற்கு கொடுத்தோம், குன்றி மலைவாழ் மக்களின் மருத்துவ தேவைக்காகவும், மூன்றாவதாக சோளக்களை கிராமத்திற்கு கொடுத்தோம். அப்போது மக்கள் ராஜா அவர்கள் சாலையோரத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆம்புலன்ஸ் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த மாதம் 17ந் தேதி சோளக்களை கிராம மக்களுக்கு கொடுத்தோம். இந்த மாதம் 15ந் தேதி,சேலம், திருப்பூர்,கோவை,பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் சாலையோர மக்களுக்காக இந்த உதவியை செய்து இருக்கிறேன். பலர் இது எப்படி செய்ய முடியும் உன்னால முடியாது என்று சொன்னார்கள். பலர் என் பாராட்டினாலும், சிலர் முடியாது என்றார்கள்.
125 நாட்களில் நான்கு ஆம்புலன்ஸ் கொடுத்து இருக்கிறேன் இது என் தகுதிக்கும் சக்திக்கும் மீறிய விஷயம். யார்கிட்டயும் ஒரு ரூபாய் கூட வாங்கல. நான் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் தான் உதவிசெய்து வருகிறேன். இந்த ஆம்புலன்ஸ் மூலம் நிறை குழந்தைகள் பிறந்துள்ளனர். நிறைய பேர் காப்பற்றப்பட்டுள்ளனர். இதை விட பெரிய மெடல், ஆஸ்கார் விருது எனக்கு கிடைக்காது’ என்று கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ….
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…