திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்… இரவோடு இரவாக ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த இபிஎஸ்….!

By Nanthini on ஆனி 12, 2026

Spread the love

தேர்தல் முடிவடைந்த பின்னரும் தமிழகத்தில் கட்சி மாறும் அரசியல் நகர்வுகள் தொடர்கதையாகி வரும் சூழலில், புதுக்கோட்டை மாவட்ட திமுகவின் முக்கிய முகமும், பிரபல வழக்கறிஞருமான டி.வளர்மதி அதிமுகவில் இணைந்துள்ளார். திமுக தலைமையின் மீது ஏற்பட்ட கடுமையான அதிருப்தி காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவர் தன்னை அக்கட்சியில் முறைப்படி இணைத்துக் கொண்டார்.

   

புதுக்கோட்டை வட்டாரத்தில் கணிசமான செல்வாக்கு கொண்ட ஒரு முக்கிய நிர்வாகி, தேர்தல் முடிந்த கையோடு மாற்று முகாமிற்குச் சென்றிருப்பது அப்பகுதி திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.