“மெட்ரோ நகரங்களுக்கு டாட்டா பை-பை… வெறும் ₹14,000-ல் மணாலியில் சொகுசு வாழ்க்கை…! வைரலாகும் இளைஞரின் பட்ஜெட்…!”

By Swetha on ஆனி 11, 2026

Spread the love

தற்போதைய கார்ப்பரேட் வாழ்க்கைச் சூழலில், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்கள் பலர், மலைப்பிரதேசங்களுக்குச் சென்று அங்கிருந்து வேலை செய்யும் ‘வொர்க் ஃபிரம் மவுண்டன்’ என்ற புதிய கலாச்சாரத்தை விரும்புகின்றனர். டெல்லியைச் சேர்ந்த அஜய் சர்மா என்ற இளைஞர், இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி நகரில் தங்கி, அங்கிருந்தபடியே தனது அலுவலகப் பணிகளைச் செய்து வருகிறார். அவர் அங்கு தங்குவதற்கு ஆகும் மாதாந்திரச் செலவுகள் குறித்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார், இது தற்போது வைரலாகி வருகிறது.

அஜய் பகிர்ந்துள்ள பட்ஜெட் விவரங்களின்படி, டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வாடகைக்கு மட்டுமே 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், மணாலியில் ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவே மிகக் குறைவாக உள்ளது. அங்கு அவர் ₹14,000 வாடகையில் ஒரு 1BHK வீட்டை எடுத்துள்ளார், இதில் மின்சாரக் கட்டணம் மற்றும் வேலைக்கு மிக முக்கியமான அதிவேக வைஃபை கட்டணமும் அடங்கும். மேலும், ஆரோக்கியமான உணவிற்காக அவரே சமைப்பதால் மளிகைப் பொருட்களுக்கு ₹3,500 மற்றும் எப்போதாவது வெளியில் சாப்பிட ₹500 என உணவிற்காக மொத்தம் ₹4,000 செலவாகிறது.

   

https://www.instagram.com/reel/DZXsdCfT-80/?utm_source=ig_web_button_share_sheet

   

அஜய் தனது உடற்தகுதியைப் பேண அங்குள்ள உள்ளூர் ஜிம்மிற்கு மாதக் கட்டணமாக ₹1,500 செலுத்துகிறார். மேலும், போக்குவரத்துச் செலவைக் குறைக்க அவர் பெரும்பாலும் நடந்தே செல்வதால் பெட்ரோல் அல்லது ஆட்டோ கட்டணம் என எதுவும் ஆவதில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மணாலியில் நிம்மதியான மற்றும் இயற்கையான சூழலில் தங்கி வேலை செய்ய இவருக்கு மாதம் ₹19,500 முதல் ₹21,000 வரை மட்டுமே செலவாகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பெருநகர ஐடி ஊழியர்கள், இது தங்களுக்குக் கிடைத்த பெரிய அதிர்ஷ்டம் எனக் கூறி, அவரிடம் அந்த வீட்டின் முகவரி மற்றும் இருப்பிட விவரங்களைக் கேட்டு வருகின்றனர்.