“முதல்வர் விஜய்யின் திடீர் அதிரடி உத்தரவு”…. லட்சுமி பிரியா IAS-க்குக் கிடைத்த மாஸ் கூடுதல் பொறுப்பு…. சற்றுமுன் அறிவிப்பு….!

By Nanthini on ஐப்பசி 25, 2026

Spread the love

தமிழக முதலமைச்சரின் இரண்டாவது தனிச் செயலாளராகப் பணியாற்றி வரும் ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ் அவர்களுக்கு, ‘முதல்வரின் முகவரி’ எனும் மக்கள் குறைதீர்ப்புப் பிரிவின் சிறப்பு அலுவலர் என்ற கூடுதல் பொறுப்பை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்தப் பொறுப்பைக் கவனித்து வந்த அமுதா ஐஏஎஸ் அவர்களுக்குப் பதிலாக, அடுத்த உத்தரவு வரும் வரை லட்சுமி பிரியா இப்பதவியை முழுமையாகக் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் இத்துறைக்குத் திறமையான அதிகாரியை நியமித்திருப்பது நிர்வாக வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்தைச் சேர்ந்த லட்சுமி பிரியா, தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த 2006-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டம் பெற்ற இவர், தனது 28-வது வயதிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் இணைந்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, கடந்த 2018-ஆம் ஆண்டு மற்ற அரசு அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக அரசு மருத்துவமனையிலேயே லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு பெரும் பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலப் பணி அனுபவம் கொண்ட இவர், மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், திட்ட இயக்குநர், இணைச் செயலாளர் மற்றும் இணை ஆணையர் உள்ளிட்ட பல்வேறு உயரிய நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட இவர், அத்துறையில் சிறப்பாகப் பணியாற்றியதைத் தொடர்ந்து, முதலமைச்சரின் ஆலோசனைகள் மற்றும் முக்கிய நிர்வாகக் கண்காணிப்புகளை மேற்கொளும் இரண்டாவது தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

   

தற்போது முதலமைச்சரின் தனிச் செயலாளராக அரசுத் துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல், அமைச்சரவை முடிவுகளை நடைமுறைப்படுத்துதல், பேரிடர் மேலாண்மை மற்றும் மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான பாலமாகச் செயல்படுதல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொண்டு வரும் லட்சுமி பிரியா ஐஏஎஸ், ‘முதல்வரின் முகவரி’ கூடுதல் பொறுப்பின் மூலம் மக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதை இனி நேரடியாகக் கண்காணிப்பார்.