என் கனவு நனவாக போகுது.. KPY பாலாவை ஹீரோவாக்கும் பிரபலம்.. அவரே வெளியிட்ட வீடியோ வைரல்..!!

By admin on சித்திரை 15, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர் பாலா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் பாலா தான் சம்பாதித்த பணத்தை வைத்து பலருக்கு உதவி செய்து வருகிறார்.

   

மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கும் வயதானவர்களுக்கும் உதவுவது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவது போன்ற பாலாவின் செயல்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

   

 

தற்போது பாலா செய்யும் அனைத்து உதவிகளுக்கும் நடிகரான ராகவா லாரன்ஸும் பங்களித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாவும் ராகவா லாரன்சும் இணைந்து கணவரை இழந்த ஒரு பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தனர். பிறகு கண்பார்வை இழந்த ஒரு சிறுவனின் அறுவை சிகிச்சைக்காக பாலாவும் லாரன்சும் இணைந்து பணம் கொடுத்தனர்.

பாலா செய்யும் அனைத்து உதவிகளிலும் இனி தனது பங்கு இருக்கும் என லாரன்ஸ் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் பாலா ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அவரது கனவை நிறைவேற்றி வைத்திருப்பது வேறு யாரும் இல்லை ராகவா லாரன்ஸ் தான். இது தொடர்பான வீடியோவை பாலா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.