தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வாழ்த்துக்களை பகிர்ந்த பிரபலங்கள்… வைரலாகும் போட்டோஸ்….

By Begam

Published on:

நேற்று தமிழ் புத்தாண்டை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். பிரபலங்கள் பலரும் தங்களது புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கும் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அவர்களில் ஒரு சிலரை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா:

   

தமிழக இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த இவர், தான் பல வருடங்களாக காதலித்து வந்த நடிகர் ரெடின் கிங்ஸ்லியை சில மதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர் தனது கணவருடன் இணைந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

அட்லீ -பிரியா:

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் அட்லீ. இவர் தனது மனைவி பிரியாவுடன் இணைந்து தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

சாந்தனு- கீர்த்தி:

இயக்குனர் பாக்யராஜின்  மகன் என்ற அடையாளத்தோடு திரையுலகில் கால் பதித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்த போராடிக் கொண்டிருக்கும் வாரிசு நடிகர் தான் சாந்தனு. இவர் தற்பொழுது தனது கீர்த்தியுடன் இணைந்து தனது ரசிகர்களுக்கு  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

நடிகர் நாஞ்சில் விஜயன்:

விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் நாஞ்சில் விஜயன். சமீபத்தில் இவருக்கு திருமணம் முடிந்தது. தற்பொழுது இவர் தனது மனைவியுடன் இணைந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

நடிகர் அருண் விஜய்:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அருண் விஜய். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து தமிழ் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து,, தனது ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

நடிகை சினேகா:

நடிகை சினேகா சமீபத்தில் சினேஹாலயா சில்க்ஸ் என்ற புது துணிக்கடை ஒன்றை ஆரம்பம் செய்திருந்தார். தற்பொழுது இவர் தனது சினேஹாலயா சில்க்ஸ் மூலம் ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

நடிகை ரம்யா:

பிரபலங்கள் பலரும் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அவர்களைப்போலவே நடிகை ரம்யாவும் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

நடிகை நயன்தாரா:

நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்கி மற்றும் தனது இரட்டை குழந்தைகளுடன் தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.