வாரங்கல் மாவட்டம் உர்சு குட்டா பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில், பட்டாலியன் காவலர் ஒருவர் மது அருந்திவிட்டு அசிங்கமாக நடந்து கொண்டு ரகளை செய்தார். இதைப் பார்த்த பார் ஊழியர்கள் உடனே 112 என்ற உதவி எண்ணிற்கு அழைத்து, சம்பந்தப்பட்ட காவலர் மீது அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
புகாரைத் தொடர்ந்து, அங்குள்ள பீட் காவலரான சந்தோஷ் ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மது போதையில் இருந்த பட்டாலியன் காவலரிடம் உடனடியாகச் சட்டையைப் போட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்புமாறு கூறிய சந்தோஷ் ரெட்டி, அவரது கன்னத்தில் அறைந்தார்.
https://twitter.com/TeluguScribe/status/2091112420987060312/video/1
இதனால் ஆத்திரமடைந்த பட்டாலியன் காவலர், சந்தோஷ் ரெட்டியின் கன்னத்தைக் கடித்துக் குதற வேண்டும் என்ற கோபத்தில் பழிவாங்கத் துடித்தார். இதன் காரணமாக, நிலைமையைக் கட்டுப்படுத்தக் காவலர் சந்தோஷ் ரெட்டி, அங்கிருந்த உள்ளூர் மக்களின் உதவியோடு அந்தப் பட்டாலியன் காவலரை லத்தியால் சரமாரியாக அடித்து துரத்தினார்.
