எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடனான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பரவி வரும் வதந்திகளுக்கு அன்பில் மகேஸ் பொய்யப்பொழி விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தங்களது குடும்பத்தின் மூன்று தலைமுறை நட்பில் பிளவு ஏற்பட்டு விட்டதாகச் சிலர் திட்டமிட்டு பொய்யான செய்திகளைப் பரப்புவதாகக் குறிப்பிட்டார்.
“நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக வெளியாகும் செய்தியை சுமார் 1.5 லட்சம் பேர் பார்க்கிறார்கள் என்றால், அந்த வீடியோவைப் பார்க்கும் 1.5 லட்சம் பேரில் உதயநிதியும் நானும் கூட இருக்கிறோம்” என்று நகைச்சுவையுடன் கூறிய அவர், மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இது போன்ற பொய்யான கருத்துகள் இணையத்தில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகத் தெளிவுபடுத்தினார்.
