சடன் பிரேக் போட்ட டிரைவர்…. பிக்அப் வாகனத்தில் இருந்து பறந்து வந்த இரும்பு பைப்புகள்… பரிதாபமாக போன உயிர்…. வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்…!!

By Devi Ramu on ஆவணி 23, 2026

Spread the love

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குற்றநெல்லூர் பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று கோரச் சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. குற்றநெல்லூரைச் சேர்ந்த ஷெரின் ஜான் (42) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சூரில் இருந்து குற்றநெல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று திடீரெனத் திரும்பியதால், ஷெரின் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார். அவருக்குப் பின்னால் வந்த பிக்அப் வேனும் உடனடியாக பிரேக் போட்டுள்ளது. இதில், வேனில் பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி வரப்பட்ட சுமார் 10 மீட்டர் நீளமுள்ள இரும்புப் குழாய்கள் மற்றும் கம்பிகள் வேனின் முன் கேபினை உடைத்துக் கொண்டு பாய்ந்து, முன்னால் நின்று கொண்டிருந்த ஷெரின் மீது கொடூரமாக விழுந்தன.

   

அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் அவரை மீட்டு ஜூபிலி மிஷன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விபத்து நடந்தவுடன் தப்பியோடிய பிக்அப் வேன் ஓட்டுநரைத் தேடி வரும் ஒல்லூர் பொலிஸார், வாகனத்தைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.