BREAKING: “இன்று காலையில் அண்ணாமலை… மாலையில் லதா ரஜினிகாந்த் தொடங்கிய புதிய இயக்கம்”… அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு….!

Spread the love

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நிழலாகவும், அவரது குடும்பத்தின் தூணாகவும் அறியப்படுபவர் லதா ரஜினிகாந்த். சென்னையில் பிறந்து, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்ற இவர், கலைக் குடும்பப் பின்னணியைக் கொண்டவர். பிரபல நாடகக் கலைஞர் ஒய்.ஜி. மகேந்திரன் இவரது நெருங்கிய உறவினர் என்பதும், இன்றைய இளைஞர்களின் நெஞ்சைக் கவர்ந்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இவருடைய தம்பி மகன் (பெரியம்மா) என்பதும் குறிப்பிடத்தக்கது. வெறுமனே ஒரு நட்சத்திரத்தின் மனைவியாக மட்டுமே முடங்கிவிடாமல், தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை ஆரம்பத்திலிருந்தே லதா ரஜினிகாந்த் உருவாக்கி வைத்துள்ளார்.

இவர்களது திருமணப் பயணம் ஒரு சுவாரஸ்யமான திரைப்படக் காட்சியைப் போன்றது. 1980-களில் தனது கல்லூரிப் பத்திரிகைக்காக ரஜினிகாந்தை நேர்காணல் செய்யச் சென்ற லதாவின் பேச்சும் குணமும், முதல் சந்திப்பிலேயே ரஜினியைக் வெகுவாகக் கவர்ந்தது. நேர்காணல் முடிந்த சில நிமிடங்களிலேயே ரஜினிகாந்த் தனது திருமண விருப்பத்தை அவரிடம் தெரிவித்தார். பின்னர், இருவீட்டாரின் சம்மதத்துடன் 1981 பிப்ரவரி 26 அன்று திருப்பதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இத்தம்பதியரின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகிய இருவருமே இன்று தமிழ் சினிமாவில் திறமையான இயக்குநர்களாக முத்திரை பதித்துள்ளனர்.

லதா ரஜினிகாந்த் ஒரு சிறந்த பின்னணிப் பாடகியாகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் தன் கலைப்பயணத்தை வெளிப்படுத்தியுள்ளார். 1981-ல் வெளியான ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தில் “நேற்று இந்த நேரம்” என்ற பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் “கடவுள் உள்ளமே” போன்ற புகழ்பெற்ற பாடல்களையும், ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தில் “மணப்பெண்ணின் சத்தியம்” என்ற பாடலையும் பாடி தன் இனிமையான குரலால் ரசிகர்களைக் கவர்ந்தார். மேலும், 1993-ல் ரஜினிகாந்த் கதை எழுதிய ‘வள்ளி’ திரைப்படத்தைத் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்து தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டார்.

கலைத்துறையைத் தாண்டி கல்வி மற்றும் சமூகச் சேவைகளில் லதா ரஜினிகாந்த் எப்போதும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். 1991-ஆம் ஆண்டு சென்னையில் ‘தி ஆசிரமம்’ (The Ashram) என்ற பள்ளியைத் தொடங்கி, அதன் மூலம் தரமான கல்வியை வழங்கி வருகிறார். குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கும் ‘ஸ்ரீ தயா பவுண்டேஷன்’ (Shree Dayaa Foundation) மற்றும் ‘பீஸ் ஃபார் சில்ட்ரன்’ (Peace for Children) ஆகிய தொண்டு நிறுவனங்களை நிறுவி, ஏழை எளிய குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உழைத்து வருகிறார்.

மக்கள் மேடை தொடர்புத் தகவல்:

  • தொலைபேசி எண்: 7550080515
  • மின்னஞ்சல் முகவரி: makkalmedaitn12@gmail.com

அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழக மக்களின் நலனுக்காகவும் ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் ‘மக்கள் மேடை’ என்ற புதிய தனி இயக்கத்தை லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழகத்திற்காக உழைக்க நினைக்கும் திறமையும், நல்மனமும் கொண்ட மூத்த குடிமக்கள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள், ராணுவ வீரர்கள் எனப் பல்துறை ஆளுமைகளும் தங்களின் அனுபவங்களை வழங்கி, இந்த இயக்கத்தின் மூலம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அன்போடு அழைப்பு விடுத்துள்ளார். வெறும் அரசியல் கலப்பற்ற ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து, தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் நன்மைகளைச் செய்ய முன்வந்துள்ள லதா ரஜினிகாந்தின் இந்த புதிய முயற்சிக்குத் தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Nanthini

Recent Posts

மதுராந்தகம் & தாராபுரம் இடைத்தேர்தல்…. அதிமுக – திமுக ரகசிய டீல்?…. தவெகவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி…

3 minutes ago

15 ஆண்டுகளாகக் கடலுக்குள் மனைவியைத் தேடும் கணவன்… “I Want to Go Home”…. ஒரு கடைசி மெசேஜ்…. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்….!

கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…

1 மணத்தியாலம் ago

“கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த பெண்…” விநாயகர் சதுர்த்தி விழாவில் நடந்த விபரீதம்… உணவு தயாரிப்பின் போது நேர்ந்த பயங்கரம்… பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…

1 மணத்தியாலம் ago

“பெண்களை மாதவிடாய்க்குள் அடைக்காதீர்கள்”… பிற்போக்கு அரசியல்வாதிகளுக்குச் சவுக்கடி கொடுத்த கனிமொழி… அமைச்சர் கீர்த்தனாவுக்கு உண்மையில் என்ன ஆச்சு….?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…

1 மணத்தியாலம் ago

“வீடியோ ஆதாரத்தை அழிக்க முயற்சி?… பவர் செண்டர் யார்?”… ஜெம் வீரமணி வழக்கால் அலறும் அறிவாலயம்…. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி….!

தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…

1 மணத்தியாலம் ago

“கைகூப்பிக் கெஞ்சிய 10-ஆம் வகுப்புச் சிறுமி… நள்ளிரவில் அத்துமீறிய கும்பல்… கொதித்துப்போய் குரல் கொடுத்த ராகுல் காந்தி…!!

பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…

1 மணத்தியாலம் ago