என்னால தான் ராமாவரம் தோட்டத்தில் வைத்து ரஜினியை அடித்தாரா எம்ஜிஆர்..? மனம் திறந்த MGR-ன் ஆஸ்தான நடிகை லதா..

By admin on கார்த்திகை 23, 2023

Spread the love

நடிகர் எம்ஜிஆர் மிகப்பெரிய அரசியல் தலைவர். உதவி என வருவோருக்கு வாரிக்கொடுக்கும் வள்ளல். தமிழ் சினிமாவில், அரசியலில் புரட்சித்தலைவர் என புகழப்படுவர். ஆனால், ஒருவர் மீது கோபம் வந்துவிட்டால், ராமாவரம் தோட்டத்துக்கு அவர்களை வரவழைத்து சவுக்கால் அடிப்பார் என்ற தகவல் நீண்டகாலமாக உள்ளது. அதுவும் அவரது கண்ட்ரோலில் இருந்த நடிகை லதா மீது ஆசைப்பட்டதற்காக, நடிகர் ரஜினியை ராமாவரம் தோட்டத்தில் வைத்து அடித்தார் எம்ஜிஆர் என்ற ஒரு சர்ச்சையும் நீண்டகாலமாக இருந்து வருகிறது.

 actress Lata

   

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் நடிகை லதா கூறியதாவது, நான் நடிக்க வந்த போது என் வயது 15. எங்கள் குடும்பம் ராஜ பரம்பரையை சேர்ந்தது. நான் சினிமாவில் நடித்தால், குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என நினைத்ததால், நான் நடிக்க வேண்டாம் என என் அம்மா மறுத்து விட்டார். அதுவும் அந்த காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பதை கவுரவக் குறைச்சலாக பலரும் நினைத்தனர். அப்போது எம்ஜிஆர், உங்கள் குடும்பத்துக்கு எந்த பாதிப்பும் வராமல், மரியாதை கிடைக்கும் வகையில் உங்கள் பெண் நடிப்பார் என கூறி, நான் நடிக்க என் குடும்பத்தினரை சம்மதிக்க வைத்தார்.

   

 actress Lata

 

இதுவரை என் படத்தில் நடித்த நடிகைகள், பிற படங்களில் நடித்துவிட்டு என் படங்களில் நடித்தவர்கள். ஆனால் நீ என் படத்தில்தான் முதலில் நடிக்கிறாய். அதனால் சரியாக இருக்க வேண்டும் என எம்ஜிஆர் எனக்கு புத்திமதி சொன்னார். என் மீது தனி கவனமும், அக்கறையும் காட்டினார். அதனால் மற்றவர்கள் எம்ஜிஆருக்கு பயந்துகொண்டு என்னிடம் பேசவே தயங்குவர். ரஜினியை எம்ஜிஆர் அடித்ததாக சொல்வதெல்லாம் கட்டுக்கதை. அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை, ரஜினி நல்ல மனிதர். சிறந்த குணம் கொண்டவர். அவர் வீட்டு விசேஷங்களுக்கு லதா ரஜினிகாந்த் என்னை அழைப்பார். என் வீட்டு விசேஷங்களில் அவர் வந்து கலந்துக்கொள்வார். குடும்ப நண்பர்களாக நாங்கள் இருந்து வருகிறோம், என்று பதில் தந்திருக்கிறார் நடிகை லதா.