விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 54 நாட்களை நிறைவு செய்துள்ளது. பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் இந்த ஷோவில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களை தொடர்ந்து 5 வைல்டு கார்டு போட்டியாளர்களும் களமிறங்கினர்.

வாரம் ஒரு எலிமினேஷன் என தற்போது வரை 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். வைல்ட் கார்டு என்ட்ரியில் உள்ளே வந்த 5 போட்டியாளர்களையும் ஏற்கனவே இருந்த ஹவுஸ்மேட்கள் எதிரிகளாகவே பார்த்து வந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடு பிடித்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே பிக் பாஸ் அதிரடியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளனர் என்றும், அவர்கள் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் என்றும் கூறியுள்ளார் பிக் பாஸ். இதனால் பயங்கர அதிர்ச்சியில் உள்ளனர் ஹவுஸ்மேட்கள். இதைத் தொடர்ந்து வினுஷா , விஜய் வர்மா, அனன்யா 3 பேரும் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் தற்பொழுது போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது வரை பூர்ணிமா மற்றும் அக்ஷயா இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் இருப்பதாகவும், இவர்கள் வெளியேற்றப்பட்டு இவர்களுக்கு பதிலாக வினுஷா, விஜய் வர்மா இருவரும் களமிறக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதைப்பற்றி உங்களுடைய கருத்து என்னென்னு கமெண்ட்-ல சொல்லுங்க.
