இன்றைய காலகட்டத்தில் அனைத்து மக்களும் சொந்தமாக நிலம் வைத்திருக்க விரும்புகிறார்கள். புதிதாக நிலம் வாங்க வேண்டும் என்றாலும் விற்க வேண்டும் என்றாலும் சரியான ஆவணங்களை வைத்திருப்பது அவசியமாகும். அதேசமயம் நில மோசடிகளை தடுக்கவும் ஆவணங்கள் சரிபார்ப்பு என்பது முக்கியம். ஒருவர் நிலம் தொடர்பான ஆவணங்களை எளிமையாக ஆன்லைன் மூலமாக சரிபார்த்துக் கொள்ள அரசு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் மயமான இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு நிலம் தொடர்பான விவரங்களை டிஜிட்டல் முறையில் அறிந்து கொள்வதற்காக இணையதளம் ஒன்றை வைத்துள்ளது.
அதாவது தமிழ்நாடு அரசின் https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் நிலம் பற்றிய விவரங்களை ஒருவர் தெரிந்து கொள்ள முடியும். மேனேஜ்மென்ட் சிஸ்டத்தை தமிழக அரசு integareted லேண்ட் ரெக்கார்டு அறிமுகம் செய்தது. ஆவண பராமரிப்பு தளமான இதில் நிலத்தின் உரிமையாளர் யார்? ஒரு நிலம் தனியார், அரசு அல்லது பொதுவிற்கு சொந்தமானதா போன்ற அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். ஆன்லைன் மூலமாக பட்டா சிட்டா வை சரிபார்த்துக் கொள்ளலாம் என்பதால் எப்போதும் எங்கு வேண்டுமானாலும் ஒருவர் விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளலாம். ஆன்லைன் இல்லாமல் இ சேவை மையம் மூலமாக இதனை தெரிந்து கொள்ள முடியும்.
