இது என்னடா சித்தார்த்துக்கு வந்த சோதனை… 3BHK படத்தில் தேவயானி இப்படி ஒரு விஷயம் பண்ணிருக்காங்களா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

By Nanthini on ஆடி 5, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பீல் குட் படங்கள் வெளியாவது என்பது அரிதுதான். அடிக்கடி ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் மாறி வருகிறது. இந்த வருடத்தில் இதுவரை வெளியான படங்களில் பீல் குட் படங்கள் என்ற பட்டியலிட்டால் அது குடும்பஸ்தன் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய திரைப்படங்கள்தான். அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளது தான் சரத்குமார் மற்றும் தேவயானி நடித்துள்ள 3BHK திரைப்படம். இந்த படத்தில் அப்பா அம்மா கதாபாத்திரங்களில் சரத்குமார் மற்றும் தேவயானி நடிக்கிறார்கள் என்றதும் சூரியவம்சம் ஜோடி மறுபடியும் நினைவுக்கு வந்தது.

Sarathkumar - Devayani Combo : 23ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும்  சரத்குமார் - தேவயானி! | Sarathkumar - Devayani Combo: Sarathkumar - Devayani  to reunite after 23 years!

   

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நடுத்தர வர்க்க குடும்பத்தினர் மிகப்பெரிய கனவாக இருக்கக்கூடிய சொந்த வீடு வாங்குதல் என்ற கனவை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாடு இந்த திரைப்படம் ஒரு கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கி இருந்த நிலையில் அருண் விஷ்வா என்பவர் தயாரித்திருந்தார்.

   

3BHK' திரைப்பட விமர்சனம்: இந்த சித்தார்த்-சரத் குமார்-நடித்த படம்  அரவணைப்பையும் நன்மையையும் வெளிப்படுத்துகிறது - தி இந்து

 

இதில் சரத்குமார் மற்றும் தேவயானி உடன் இணைந்து சித்தார்த், மீதா ரகுநாத், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் சரத்குமார் வாசுதேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் வாசுதேவன் மனைவி சாந்தியாக தேவயானி நடித்துள்ளார். மீதா ரகுநாத் ஆர்த்தி ரோலில் வாசுதேவன் மகளாகவும் பிரபு என்ற ரோலில் வாசுதேவன் மகனாக சித்தார்த்தும் நடித்துள்ளனர். இப்படியான நிலையில் இந்த திரைப்படம் குறித்து ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

சூர்யவம்சம் காட்சியை ரீகிரியேட் செய்த 3 BHK குழு! ராதிகாவாக தேவயானி!  சின்ராசு யார் தெரியுமா? | 3BHK Team Recreates Iconic Scene from Suryavamsam  Featuring Sarathkumar and ...

அதாவது இந்த படத்தில் சாந்தி கதாபாத்திரத்தில் சித்தார்த்தின் அம்மாவாக நடித்துள்ள தேவயானியின் வயது 51. கடந்த 1974 ஆம் ஆண்டு பிறந்த தேவயானிக்கு தற்போது 51 வயதாகிறது. அதுவே தேவயானியின் மகனாக பிரபு கதாபாத்திரத்தில் நடித்துள்ள சித்தார்த் கடந்த 1979 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் அவருக்கு 46 வயதாகிறது. தன்னுடன் ஐந்து வயது இளைய நடிகருக்கு தான் தேவயானி அம்மாவாக நடித்துள்ளார். இந்தச் செய்தி தான் தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.