தமிழ் சினிமாவில் ஆக்சன் படங்கள் அதிகளவு வந்தாலும் ஒரு சில பீல் குட் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது, அந்த வகையில் ஒரே நாளில் பறந்து போ மற்றும் 3 BHK படங்கள் நேற்று வெளியானது. மிர்ச்சி சிவா நடித்துள்ள 3 BHK படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். இதற்கு போட்டியாக வெளியான பறந்து போப் படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தார்த், தேவயானி, சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களுக்குமே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இரண்டு படத்திற்கும் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இரண்டு படங்களின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 3 BHK படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதாவது இந்த படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ஒரு கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதற்கு போட்டியாக வெளியான பறந்து போ படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தாலும் இந்த படம் வெறும் 42 லட்சம் மட்டும்தான் வசூல் செய்துள்ளது.
