பெங்களூரை சேர்ந்த சஞ்சீவ் என்பவர் ஆடம்பரக் கார்கள் ,சொகுசு கார்கள், பழமையான கார்கள் ஆகியவற்றை வாங்கி குவித்து வைக்கும் பழக்கம் கொண்டவர். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பதிவேற்றி வருவது வழக்கம். இதன் மூலம் இவருக்கு 2 லட்சம் பாலோவர்ஸ் உள்ளனர். இவரிடம் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு கார் உள்ளது.
இந்நிலையில் அந்த காரை அவர் சாலையில் ஓட்டி சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த பொதுமக்கள் காரை கண்டு வியப்பாக பார்த்தனர். சாலையில் ஒட்டிக்கொண்டு செல்லும்போது திடீரென்று காரில் தீப்பிடித்துக் கொண்டது. இதை சுதாரித்துக் கொண்ட சஞ்சீவ் காரை விட்டு இறங்கி தீயை அணைக்க முயன்றார். தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. சஞ்சீவ் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்றார். நடுரோட்டில் சொகுசு கார் தீ பிடித்து எரியும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
