பீகார் மாநிலத்தில் அண்மையில் இரு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) மீண்டும் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இத்தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி (RJD) பின்னடைவைச் சந்தித்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, ஆர்.ஜே.டி கட்சியின் நிறுவனரான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, அரசியலில் இருந்தும், தனது குடும்பத்தில் இருந்தும் விலகுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே இந்தப் பிரிவு முடிவை எடுத்ததாகவும், அனைத்துப் பழிச் சொற்களையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜ் பிரதாப், கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் விலகித் தனிக் கட்சி நடத்தி வரும் சூழலில், ரோகிணி ஆச்சார்யாவின் இந்தப் பதிவு பீகார் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…