‘முக்கியமான இடத்தில லால் சலாம் ஆடியோ லான்ச்’.. மகளுக்காக ரஜினி எடுத்து அதிரடி முடிவு.. தொடருமா காக்க, கழுகு கதை..?

By Nanthini

Updated on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினியின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் தற்போது கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு லால் சலாம் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார் . இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு திருவண்ணாமலை, சென்னை மற்றும் மும்பை ஆகிய பல இடங்களில் நடந்து முடிந்தது.

   

போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ள நிலையில் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு லால்சலாம் பட குழு அவர் நடித்த காட்சிகளை டீசர் போல் கட் செய்து அதன் கிளிம்ப்சை வெளியீட்டது.

இந்த நிலையில் லால் சலாம் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் எங்கு நடைபெறும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஆன சாய்ராம் கல்லூரியில் இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் 21ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்வாரா என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. ஆனால் அவர் நினைத்தால் மட்டுமே தனது மகளை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

ரஜினி மட்டும் இந்த ஆடியோ லான்ச்சுக்கு வந்து தெறிக்க விட்டால் இந்த படத்திற்கு வேறுவிதமான அந்தஸ்து கிடைக்கும். இந்த படத்தின் பிசினஸும் தாறுமாறாக எகிறும். எல்லாமே ரஜினி எடுக்குற முடிவுல மட்டும்தான் இருக்கு. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாரை எப்படியாவது ஒத்துக்க வைத்து லால் சலாம் திரைப்படத்தின் ஆடியோ லான்ச்சுக்கு வர வைக்க பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் ரஜினி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாள் ஜெய்லர் பட இசை வெளியீட்டும்போது காக்கா கழுகு கதை கூறியது போல இப்போதும் ஒரு கதையை கூறுவாரா எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author avatar
Nanthini