138-னு பேசிட்டு 32 தியேட்டர் தான் குடுத்தாங்க.. அந்த படத்தால 62 லட்சம் மொத்தமா போச்சு.. புலம்பிய பெண் இயக்குனர்..

By Archana on மார்கழி 27, 2023

Spread the love

தமிழ் சினிமா மட்டுமன்றி இந்திய சினிமாவிலும் நல்ல கதை அம்சம் கொண்ட நல்ல படங்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருக்கிறது. சிறிய படங்களை காட்டிலும் முதல் தர ஹீரோக்களின் ஒரு படம் சரியாக வசூல் செய்யவில்லை என்றாலும் அடுத்து அவர்களின் படங்களை திரையிடுவது கடினம். அப்படியிருக்க வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தியேட்டருக்கு கொண்வருவது அரிதிலும் அரிதானது. அப்படி தான் இயக்குனர் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் நடந்திருக்கிறது.

#image_title

பல படங்களில் கதாபாத்திர மற்றும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி.. அதன் பின் ஆரோகணம், அம்மணி, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட படங்களை இயக்கினார். சிறு பட்ஜெட்டில் வளர்ந்து வரும் நடிகர்களை கொண்டு உருவாகிய இந்தப் படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஹவுஸ் ஓனர் படம் குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஹவுஸ் ஓனர் படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து கூறியிருக்கிறார். அதாவது ஹவுஸ் ஓனர் படத்தை எடுத்து விற்று விட்டதாகவும், அதனால் படத்திற்கு லாபம் கிடைத்ததாக கூறியுள்ளார். ஆனால் அப்படத்தை தியேட்டருக்கு கொண்டு வர விளம்பரங்களுக்காக சுமார் 60லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும் அவை அனைத்தும் வீணாகி விட்டதாகவும் கூறியுள்ளார்.

   
   

#image_title

 

அதாவது ஹவுஸ் ஓனர் படத்தின் போது விஜய் சேதுபதியின் சிந்துபாத் படமும் ரிலீசாக இருந்ததால், ஹவுஸ் ஓனர் பட போஸ்டர்கள் மீது சிந்துபாத் பட போஸ்டர்கள் ஒட்டப் பட்டதாகவும், ஹவுஸ் ஓனர் படத்திற்காக எடுக்கப்பட்ட நேர்காணல்களுக்கு பதில் சிந்துபாத் பட நேர்காணல் ஒளிபரப்பப் பட்டதாகவும் கூறியுள்ளார். அத்தோடு முதலில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 138 தியேட்டர்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் 32 திரைகள் மட்டுமே வழங்கப் பட்டதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படுவதாக பேச்சு எழுந்துள்ள நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த நேர்காணல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

#image_title