நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவுக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் காரணமா..? இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி தகவல்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்பொழுது தனுஷ் தமிழில் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கேங்ஸ்டராக நடிக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது.

   

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில்  இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசாகும் என கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். தற்போது இதற்கு தற்காலிகமாக ‘D 50’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷான், ஜெயராம் காளிதாஸ்,  நித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Dhanush

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டதும்,   இவர்களுக்கு 2 மகன்கள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் தனித்தனியாக தங்களது கெரியரில் மட்டும் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கின்ற திரைப்படத்திற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரின் பிரிவுக்கு காரணமாக அமைந்த திரைப்படம் என்றும் ஒரு செய்தி இணையத்தில் தற்பொழுது வைரலாகி பரவி வருகிறது.

soundharya

அதாவது இத்திரைப்படம் முதன்முதலில் நடிகர் தனுஷ் திரைக்கதை, வசனம் எழுத இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் தங்கையான சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவிருந்ததாம். ஆனால் இந்த திரைப்படத்திற்காக சௌந்தர்யாவுடன் இணைந்து தனுஷ் பணி செய்யக்கூடாது என்று கூறி தான் முதல் முதலில் ஐஸ்வர்யாவிற்கும் தனுஷுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து முற்றிய சண்டை தான் தற்பொழுது தனுஷ் -ஐஸ்வர்யா பிரிந்து வாழ காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இத்தகவல் உண்மையா என்பது நமக்கு தெரியவில்லை.