இதுக்கு பேர்தான் அதிர்ஷ்டம்…. துர்கா பூஜையை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்ற தொழிலாளி… ஒரே இரவில் லட்சாதிபதியான அதிசயம்…!

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவராத்திரி பண்டிகையின் ஆனந்த தருணத்தில் சாதாரண கூலி தொழிலாளி வாழ்க்கை ஒரே இரவில் மாறிய சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் பண்ணா மாவட்டத்தை சேர்ந்த கோவிந்த் சிங் ஆதிவாசி, கோரா மாதா துர்கா கோவில் பூஜையை முடித்து வீடு திரும்பியுள்ளார். அந்த சமயத்தில் சாலையோரத்தில் பளபளப்பாக இருந்த ஒரு பொருளை அவர் கண்டார். உடனே அதை எடுத்துப் பார்த்தபோது அது 4.04 கேரட் தரமான வைரமாக இருப்பது தெரியவந்துள்ளது.

அதன் இன்றைய மதிப்பு 15 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கோவிந்த் சிங்குக்கு நான்கு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆகி ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் மற்றும் தினக்கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். வைரத்தை அரசு அலுவலகத்தில் ஒப்படைத்த கோவிந்த் ஏலத்தில் கிடைக்கும் தொகையை பயன்படுத்தி வீடு கட்டி, டிராக்டர் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளார்.

இதற்கு முன்பாக கோவிந்த் 2.50 கேரட் வைரத்தையும் ஒருமுறை கண்டெடுத்துள்ளார். ஆனால் அந்த வைரத்தின் மதிப்பு இவ்வளவு அதிகம் கிடையாது. இந்த முறை அவருக்கு கிடைத்த வைரம் அவரின் குடும்ப வாழ்க்கையை முற்றிலும் மாற்றி உள்ளது. இப்படி ஒரு அதிசயத்தை துர்கா அம்மனின் அருளாகவே கருதும் கோவிந்த் தனது குடும்பத்துடன் புதிய வாழ்க்கை பாதையை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றார். இந்த சம்பவம் அதிர்ஷ்டம் எப்போது, எங்கு யாருக்கு வரும் என தெரியாது என்ற உண்மையை உணர்த்துகிறது.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

2 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

2 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

2 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

2 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

3 மணத்தியாலங்கள் ago