காலையிலேயே பரபரப்பு…. மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் எல்முருகன்?… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

Spread the love

மத்திய இணையமைச்சராகப் பதவி வகித்து வரும் எல்.முருகன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக அரசியலில் நேரடியாகக் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில், அவர் அவிநாசி (தனி) தொகுதியைத் தேர்வு செய்து அங்கு தனது கவனத்தைச் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தமிழகம் வரும் போதெல்லாம் அவர் அவிநாசி பகுதிக்குச் சென்று மக்களைச் சந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வாக அதிமுகவைச் சேர்ந்த தனபால் உள்ளார். முன்னாள் சபாநாயகரான இவர், உடல்நலக் குறைவு மற்றும் தொகுதிப் பணிகள் மீதான அதிருப்தி காரணமாக மக்களிடையே செல்வாக்கை இழந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், தொகுதியில் தனபாலுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் இருப்பதால், அந்தச் சூழலைப் பயன்படுத்தி வெற்றி பெற எல்.முருகன் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ள நிலையில், அவிநாசி தொகுதியில் போட்டியிட்டால் தனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று எல்.முருகன் கணிக்கிறார். இதனிடையே, அவிநாசி தொகுதியில் போட்டியிட விரும்பிய தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அதிமுகவில் உரிய வாய்ப்பு கிடைக்காததால் தவெகவில் இணைந்துள்ளார். இது அந்தத் தொகுதியில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நீலகிரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த எல்.முருகன், தற்போது சட்டப்பேரவை உறுப்பினர் ஆவதன் மூலம் தமிழக அரசியலில் வலுவாக நிலைபெற விரும்புகிறார். அவர் தனது மத்திய அமைச்சர் பதவியைத் துறந்து தேர்தலைச் சந்திப்பாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகத் தொண்டர்களும், அரசியல் நோக்கர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Nanthini

Recent Posts

நிஜ ‘கடவுள்’ இவர்தான்! உயிருற்றுப் பிறந்த குழந்தை.. வாயோடு வாய் வைத்து ஊதி உயிர் கொடுத்த பெண் டாக்டர்: இணையத்தை உறைய வைத்த பகீர் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிறந்து சில நிமிடங்களே ஆன ஒரு…

40 seconds ago

BREAKING: விரும்புபவர்கள் பதவி விலகிக்கொள்ளலாம்.. சாட்டையை சுழற்றிய மு.க ஸ்டாலின் ..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் அமைப்பு ரீதியாகப்…

11 minutes ago

“யாராலும் தப்பிக்க முடியாது உலகமே அழிந்துவிடும்” அமெரிக்காவுக்கு சீனா விடுத்த இறுதி எச்சரிக்கை – ஷி ஜின்பிங் பேச்சால் உலக நாடுகளில் நிலவும் பெரும் பதற்றம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு உலக அரங்கில் பெரும் கவனத்தைப்…

15 minutes ago

குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி கூடுதல் விலைக்கு மது விற்றால் என்ன நடக்கும் தெரியுமா..? தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களின் விற்பனை விலையை விடக் கூடுதலாக ரூ. 10 முதல் ரூ. 20…

30 minutes ago

அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை தொடரும்… தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது…

31 minutes ago

விலகுகிறேன்..! “முஸ்லிம்களுக்கு அதிமுகவில் அங்கீகாரம் இல்லை” ஜவஹர் அலி அதிரடி ராஜினாமா.. அதிர்ச்சியில் எடப்பாடி..!!

"அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை; பணம் மற்றும் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுக்கிறார்" என்று…

33 minutes ago