“அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை; பணம் மற்றும் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுக்கிறார்” என்று குற்றம் சாட்டி, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளருமான ஜவஹர் அலி தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். குறிப்பாக, அதிமுகவில் முஸ்லிம்களுக்குச் சிறிதளவு கூட அங்கீகாரம் வழங்க எடப்பாடியார் விரும்புவதில்லை என்றும், அவர்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் பகிரங்கமாகப் புகார் வாசித்துள்ளார்.
கட்சியில் சிறுபான்மையின மக்கள் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதால், அங்குத் தொடர்ந்து நீடிக்கத் தனக்கு விருப்பமில்லை என்று ஜவஹர் அலி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அதிமுகவின் கட்சிப் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் தகுதி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக மூத்த சிறுபான்மையின தலைவர் ஒருவர் வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…