“நோ.. நோ.. நீங்களே பேசுங்க”…. செய்தியாளர்களை கண்டதும் எஸ்கேப் ஆன ‘புரோட்டோகால்’ பிரியா… ரிப்பன்பில்டிங்கில் நடந்த அந்த ஒரு சம்பவம்….!

Spread the love

தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய அரசு அமைந்து ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இதுவரையில் முதலமைச்சர் விஜய் அவர்களை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக அரசை மேயர் பிரியா புறக்கணிப்பதாக ஒரு தரப்பினர் விமர்சித்து வரும் சூழலில், மக்கள் பணிகளில் ஒருங்கிணைந்து செயல்படாமல் விருப்பு வெறுப்புகளைக் காட்டுவது முறையல்ல என்ற கருத்துக்களும் பரவலாக எழுந்துள்ளன.

இதற்கிடையே, கடந்த ஜூன் 4-ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் நடைபெற்ற பள்ளி வகுப்பறை திறப்பு விழாவில், தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவி அவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படாமல் அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்தது. இதுகுறித்த கேள்விக்கு, அனைத்தும் அரசு ‘புரோட்டோக்கால்’ முறைப்படியே நடந்ததாக மேயர் பிரியா விளக்கமளித்த போதிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு முன்னுரிமை தராததால் சமூக வலைத்தளங்களில் அவரை நெட்டிசன்கள் “புரோட்டோகால் பிரியா” என்று விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், சென்னை ரிப்பன் கட்டிடத்தில் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தவெக அரசைச் சேர்ந்த பள்ளிக்கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனும், மேயர் பிரியாவும் முதன்முறையாக ஒரே மேடையில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கினர்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்திக்க ஆயத்தமானார். அப்போது அங்கு வந்த மேயர் பிரியாவை, “அம்மா வர்றீங்களா, பத்திரிகையாளர் சந்திப்பில் பேசலாம்” என்று அமைச்சர் அழைத்தார். ஆனால், அதற்கு “இல்லை இல்லை… நீங்க பேசுங்க, நான் வருகிறேன்” என்று கூறிவிட்டு, செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து மேயர் பிரியா அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினார். ‘இன்னும் 6 மாதத்திற்கு இவர்களோடு எப்படி ஓட்டப் போகிறோம்’ என்ற பதற்றத்துடனே மேயர் அங்கிருந்து நகர்ந்தார் என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“வைகோ கேட்ட பதவி… மறுத்த விஜய்”…. தவெக ஆட்சி அமைக்க உதவிய வெங்கட் நாராயணா… டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தின் பின்னணியில் இருக்கும் ரகசியம்….!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

3 minutes ago

நட்சத்திர ஓட்டலில் ரகசிய மீட்டிங்… பதறியடித்து தலைமறைவான செந்தில் பாலாஜி… பின்னணியில் ‘கரூர் கம்பெனி’?… ஆடிப்போன திமுக பாசறை…!

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

6 minutes ago

வைகோ Vs திருமாவளவன்… தவெக கூட்டணியின் ‘அந்த’ முக்கிய பதவி யாருக்கு?… CM விஜய் எடுக்கும் அதிரடி முடிவு… தவெக வில் நடக்கும் ரகசிய யுத்தம்…!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…

7 minutes ago

சிபிஐ கையில் இருக்கும் வழக்கை கையில் எடுத்த திமுக.. அடுத்த விக்கெட் இவர்தானா?…. ஆதவ் அர்ஜுனாவின் ஒற்றை பேச்சால் ஆடிப்போன தமிழக அரசியல்…..!

கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…

12 minutes ago

போடு ரகிட ரகிட… இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…

24 minutes ago

21 வயது பெண்ணின் மாடலிங் ஆசை… Whatsappல் வந்த அந்த ஒரு லிங்க்… சைபர் சைக்கோ செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!

பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும்…

28 minutes ago