“வைகோ கேட்ட பதவி… மறுத்த விஜய்”…. தவெக ஆட்சி அமைக்க உதவிய வெங்கட் நாராயணா… டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தின் பின்னணியில் இருக்கும் ரகசியம்….!

Spread the love

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான இவரை, மேகதாது அணை விவகாரம் போன்ற கர்நாடகாவுடனான சிக்கல்கள் நீடிக்கும் சூழலில் விஜய் தேர்வு செய்திருப்பது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. முன்னதாக, தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் அர்லேகரை விஜய் சந்தித்த போதே வெங்கட் நாராயணா உடன் சென்றிருந்தார். அப்போதே இவருக்கான முக்கியத்துவம் என்ன என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி அதற்கான விடையாக அமைந்துள்ளது.

மறுபுறம், இந்த முக்கிய பொறுப்பைக் கைப்பற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தீவிரமாக காய் நகர்த்தி வந்தார். தமக்கு தற்போது ராஜ்ய சபா எம்பி பதவி இல்லாத சூழலில், டெல்லியில் தமக்குள்ள நீண்டகால அரசியல் செல்வாக்கை முன்வைத்து தவெகவிடம் இந்த பதவியைக் கோரினார். ஆனால், மதிமுகவின் கோரிக்கையை முதல்வர் விஜய் முற்றிலுமாக நிராகரித்துவிட்டார். மத்திய அரசுடன் எவ்வித மோதல் போக்கும் இன்றி இணக்கமாகச் செல்லவே தவெக தலைமை விரும்புகிறது. தமிழ்நாட்டின் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசின் நிதி ஆதாரங்கள் தேவை என்பதால், திரைமறைவில் பாஜகவுடன் ஒரு சுமுகமான உறவைப் பேணவே வெங்கட் நாராயணாவை விஜய் ‘டிக்’ செய்துள்ளார் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதற்கு முன்பாக, ‘ஜனநாயகன்’ படத்தின் சென்சார் சிக்கலின் போதே டெல்லி மற்றும் பாஜக மேலிடத் தொடர்புகளைப் பயன்படுத்த வெங்கட் நாராயணா தயாராக இருந்தார். மேலும், தவெக ஆட்சி அமைக்க டெல்லி தரப்பில் முட்டுக்கட்டைகள் போடப்பட்ட போது, வெங்கட் நாராயணா மூலமாகவே பேசப்பட்டு சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இந்த இக்கட்டான சூழலில் அவர் ஆற்றிய தூதுவர் பணி, முதல்வர் விஜய்க்கு அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளிலும், நிர்வாக ரீதியிலான தொடர்புகளிலும் எந்தவொரு முடக்கமும் ஏற்படாமல் காரியம் சாதிக்க வெங்கட் நாராயணாவின் நியமனமே சரியானது என்ற இறுதி முடிவுக்கு விஜய் வந்துள்ளார்.

Nanthini

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

4 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

4 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

5 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

5 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago