கே எஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைப்பட தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் அதிகமாக பணிபுரிந்து இருக்கிறார். வணிக ரீதியாக வெற்றி பெறும் படங்களை இயக்கும் இயக்குனர்களில் இவரும் ஒருவர். இவரது படங்கள் குடும்பப்பாங்காக குடும்ப கதைகளாகவே இருக்கும்.

ஆரம்பத்தில் பாரதிராஜா, விக்ரமன், நாகேஷ், ராமராஜன், கே. ரங்கராஜ் என பல்வேறு இயக்குனர்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கே எஸ் ரவிக்குமார். விக்ரமன் இயக்கிய புது வசந்தம் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் கே. எஸ். ரவிக்குமார். இந்த படத்தின் வெற்றியால் அவருக்கு இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்தது. 1990 ஆம் ஆண்டு புரியாத புதிர் என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக முதலில் அறிமுகமானார் கே எஸ் ரவிக்குமார்.
அடுத்ததாக 1991 ஆம் ஆண்டு சேரன் பாண்டியன் என்ற திரைப்படத்தை இயக்கி அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கே எஸ் ரவிக்குமார். அடுத்ததாக 1994 ஆம் ஆண்டு இவர் சரத்குமாரை வைத்து நாட்டாமை என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பரவி மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் சிறந்த இயக்குனருக்கான மாநில விருதையும் வென்றது.
தொடர்ந்து முத்து, பரம்பரை, அவ்வை சண்முகி, நட்புக்காக, படையப்பா, மின்சார கண்ணா, பஞ்சதந்திரம், வில்லன், தசாவதாரம் போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்கள் ஒருவராக இருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட கே எஸ் ரவிக்குமார், தற்போதைய சினிமா பற்றி பேசும்போது, இப்போது வெளிவரும் படங்களை எல்லாம் ஒரு தடவைக்கு மேல் பார்க்க முடியவில்லை போரடிக்கிறது. ஆனால் என்னுடைய படங்கள் எல்லாமே இன்று டிவியில் எத்தனை தடவை போட்டாலும் மக்கள் ரசித்து பார்க்கின்றனர் என்று ஓபனாக பேசியிருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.
