My name is Billa பாட்டை இவ்ளோ கஷ்டப்பட்டு எடுத்துருக்காங்களா..? சுவாரஸ்யத்தை பகிர்ந்த டான்ஸ் மாஸ்டர்..!!

By admin on ஐப்பசி 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் கல்யாண். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வேலை பார்த்துள்ளார். இவர் 200-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களுக்கு கோரியோகிராப் செய்துள்ளார்.

   

கடந்த 1987-ஆம் ஆண்டு ரிலீசான பெயர் சொல்லும் பிள்ளை திரைப்படத்தில் நடன கலைஞராக என்ட்ரி கொடுத்தார். 1980-களில் பல தமிழ் திரைப்படங்களில் உதவி நடன இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் பில்லா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் அஜித் குமார் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

   

வீடியோ கேம் விளையாடி அஜித் ஃப்ரெண்ட் ஆனேன்!" - கல்யாண் மாஸ்டர் | Dance master kalyan speak about his career! - Vikatan

 

இந்த படத்தின் காட்சிகள் மலேசியாவிலும், கோலாலம்பூரிலும் நடைபெற்றது. நமிதா, நயன்தாரா, பிரபு, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். பில்லா திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். சமீபத்தில் நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பில்லா படத்தில் மை நேம் இஸ் பில்லா பாடல் சாங் இல்லாம தான் எடுத்து இருக்கோம்.

Ajith Kumar's Billa, celebrates 9 years of release

அதுல டிக் டிக் டிக் அப்படின்னு லிரிக் மட்டும் தான் வந்துச்சு. BGM எதுவுமே கிடையாது. அந்த பாடல் எடுக்கும்போது யுவன் ஊர்ல இல்ல. அவரு ஒரு பிரச்சினையாக வெளியூர்ல இருந்தாரு. இங்க செட்டு எல்லாம் போட்டாச்சு. சாங் பிஜிஎம் எதுவுமே இல்ல. அப்படித்தான் அந்த பாட்டு எடுத்தோம். அதே மாதிரி தான் ஆலுமா டோலுமா பாடல் பல்லவி மட்டும் வச்சு எடுத்தது என கூறியுள்ளார்.