பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி இன்று மூன்றாவது நாள் ஆகும். காலையிலிருந்து ஒரே சண்டையாக இருந்து வருகிறது. சமையலறையில் ஆரம்பித்த சண்டை பற்றிய முதல் பிரமோ இன்று வெளியான நிலையில், அதில் டி என்று சொல்லாத எனக்கு பிடிக்காது என்று VJ விஷாலை பார்த்து பவித்ரா கத்தினார். இருவருக்கும் இடையே சண்டை வர போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சீனியர் போட்டியாளர்களான நடிகர் ரஞ்சித் மற்றும் ரவீந்தர் சந்திரசேகரன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

நீ தேவையில்லாமல் பேசாத என்று ரவீந்தர் கூற, நான் எங்க தேவையில்லாம பேசுறேன் பேசாம இருங்க என்று ரஞ்சித் சொன்னார். எதுக்குங்க அந்தப் பொண்ண மிரட்டுறீங்க என்று ரவீந்தர் கேட்டார். பேச்சு பேச்சாக இல்லாமல் போக விபரீதம் ஏற்படுவதை உணர்ந்த ஆண் போட்டியாளர்கள் ரஞ்சித்தை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். அதில் அருண்பிரசாந்த்தை பிடித்து கீழே தள்ளி விட்டார்கள். இது பிக் பாஸ், வேற பாஸ் கிடையாது, இந்த கைய நீட்டுறது, நான் ஒன்னும் வேலைக்காரன் கிடையாது என்று ரஞ்சித் கத்தினார்.

அவரை சக போட்டியாளர்கள் கட்டுப்படுத்தினார்கள். ஜாக்குலின் ரவீந்தரை அமைதியாக இருக்க சொல்ல அவரோ என்ன பண்ணிடுவ நீனு கேட்க, ரஞ்சித் அவரை அடிக்க பாய்ந்தார். இந்த சண்டையில் ரவீந்தர் டயர்ட் ஆகிவிட்டார். தற்போது அது தொடர்பான ப்ரோமோ வெளியாகி பார்வையாளர்களை பதற வைத்துள்ளது. ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் ரவீந்தரிடம் ரஞ்சித் இப்படி சண்டைக்கு போவதை பார்த்து பார்வையாளர்கள் பதறி விட்டனர்.
